வாஷிங்டன் : உக்ரேன் மீது படையெடுத்த ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புடின் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்கும் நோக்கிலும் அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அவரின் 2 மகள்களின் வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கியது.
உக்ரேனின் பூச்சா நகரிலிருந்து வெளியேறும்போது கொடூரமானத் தாக்குதல்களை ரஷிய இராணுவத்தினர் மேற்கொண்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது.
மேலும் புடின் தனது சொத்துகளில் பெரும்பகுதியை மகள்களின் வங்கிக் கணக்குகள் வழியாகப் பதுக்கி வைத்திருக்கலாம் எனவும் அமெரிக்கா நம்புகிறது.
அத்துடன் ரஷியாவின் வெளியுறவு அமைச்சரின் மனைவி, மகள் ஆகியோரின் சொத்துகளை முடக்கும் உத்தரவையும் அமெரிக்கா பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப் பெரிய நிதி நிறுவனமான ஸ்பெர்பேங் (Sberbank) மீதும், ரஷியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான அல்ஃபா பேங்க் (Alfa Bank) மீதும் பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.
இந்தப் புதிய பொருளாதாரத் தடைகள் ரஷியா மீதான பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.