Home நாடு எழுத்தாளர் உதயசங்கர், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கைது

எழுத்தாளர் உதயசங்கர், நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கைது

811
0
SHARE
Ad

ஷா ஆலாம் : மலாய் மொழியிலும், தமிழிலும் நன்கு அறிமுகமாக எழுத்தாளர் உதயசங்கர் எஸ்பி நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 11) ஷா ஆலாமில் கைது செய்யப்பட்டார்.

அவரின் சமூக ஊடகப் பதிவில் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

புக்கிட் அமான் காவல் துறை அலுவலகம் இந்தக் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

குற்றவியல் சட்டம் 298A பிரிவு மற்றும் தொடர்பு பல்ஊடக சட்டம் 1998-இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார். சமூகத்தில் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதை இந்த சட்டங்கள் குற்றமாக்குகின்றன. தொடர்பு சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் இந்த சட்டங்கள் குற்றமாக்குகின்றன.

சர்ச்சைக்குரிய அந்த சமூக ஊடகப் பதிவு ஏப்ரல் 7-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு இலாகாவின் இயக்குநர் அப்துல் ஜாலில் ஹாசான், 50 வயதான உதயசங்கர் ஷா ஆலாம் தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள அவரின் இல்லத்தில் நேற்று காலை 11.15 மணியளவில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

அவரின் சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட அவரின் ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. விசாரணக்காக அவரைத் தடுப்புக் காவலில் வைக்கும் நீதிமன்ற உத்தரவை இன்று காவல் துறை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.