புத்ரா ஜெயா : மலேசியர்கள் மிகப் பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கும் கட்சித் தாவல் சட்டம் எதிர்வரும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அமைச்சரவை உறுப்பினர்களிடையே கட்சித் தாவல் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடு நிலவுகிறது.
தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் கணிசமானவர்கள் ஏற்கனவே கட்சித் தாவலை நடத்தி ஆட்சியையும், அமைச்சர் பதவிகளையும் பிடித்தவர்கள் என்பதுகூட இதற்கான காரணமாக இருக்கலாம்.
கட்சித் தாவல் சட்டத்திற்கு மாற்றாக, மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்த முடிவு குறித்து எதிர்க்கட்சிகளின் அதிகாரபூர்வ நிலைப்பாடு இன்னும் தெரியவில்லை.