Home நாடு பவுல் சூ யோங் கியோங் மீண்டும் பணிக்கு திரும்பினார்!

பவுல் சூ யோங் கியோங் மீண்டும் பணிக்கு திரும்பினார்!

738
0
SHARE
Ad

ஈப்போ: இந்தோனிசிய பணிப்பெண் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினரான பவுல் யோங் சூ கியோங் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாக பேராக் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ராசாருடின் ஹுசைன் தெரிவித்திருந்தார்.

கடந்த திங்கட்கிழமை பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர்  இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக ஜெலாபாங் காவல் நிலையத்தில் அப்பெண்மணி புகார் அளித்திருந்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த வழக்கு தண்டனைச் சட்டம்  376-வது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

துரோனோவின் சட்டமன்ற உறுப்பினருமான யோங், இன்று தனது அலுவலகத்தில் பல திட்டமிடப்பட்ட கூட்டங்களை நடத்தயுள்ளதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக அவை கடந்த சில நாட்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால் தாம் தற்காலிகமாக வேலையில் இருந்து விடுப்பு எடுக்கத் தயாராக இருப்பதாக யோங் கூறினார்.

விசாரணையை மேற்கொள்வதற்கான காவல்துறையின் நிபுணத்துவம் குறித்து தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும்,  முழு ஒத்துழைப்பை அவர்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.