அண்டார்டிகா: கடந்த 2017-ஆம் ஆண்டு அண்டார்டிகா பகுதியில் இருந்து ஏ68 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது.
தற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் மிதப்பதாக செயற்க்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.
160 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்ததாக தெரிந்தது. இந்நிலையில், தற்போது இது நகர ஆரம்பித்துள்ளது.
சுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள்ளார்.