Home உலகம் அண்டார்டிகா பனிப்படலம் குறைவதால் பூமியின் ஈர்ப்பு விசையில் பெரும் மாற்றம்!

அண்டார்டிகா பனிப்படலம் குறைவதால் பூமியின் ஈர்ப்பு விசையில் பெரும் மாற்றம்!

691
0
SHARE
Ad

devil-island-icebergலண்டன், அக்டோபர் 14 – அண்டார்டிகாவில் உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்படலம் அதிக அளவில் குறைந்து வருவதால், பூமியின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.

பூமியின் ஈர்ப்புவிசை தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரும் அந்நிறுவனம், கடந்த 2009-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக செலுத்தப்பட்ட செயற்கைக்கோள், பூமிக்கு அனுப்பிய தகவல்களை அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து ஆய்வுகுட்படுத்தியது.

அந்த ஆய்வின் இறுதியில், பூமியின் ஈர்ப்பு விசையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது:-

#TamilSchoolmychoice

“பூமியின் சுழற்சி, மலைத் தொடர்கள், ஆழ்கடலில் உள்ள பெரும் பள்ளங்கள் போன்ற பல்வேறு காரணங்களால், பூமியின் ஈர்ப்பு விசை வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றது. அதே போல், வட துருவ, தென் துருவ பனிப் பிரதேசங்களும் புவி ஈர்ப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.”

antaticca“அண்டார்டிகா பகுதியில் உள்ள பூமியின் ஈர்ப்பு விசை குறித்து, 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை செயற்கைக்கோள் அளித்த தகவல்களின் அடிப்படையில் நடத்திய ஆய்வில், அங்கு பனிப்படலம் அதிக அளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புவி ஈர்ப்பு விசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.”

“2011-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை 125 கன கிலோமீட்டர் அளவிலான பனிப்படலம் குறைந்துள்ளது” என்று கூறியுள்ளனர்.