இந்த விருது பற்றி மலாயன் இஸ்லாமிய வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியும், மலாயன் வங்கிக் குழுமத்தின் தலைவருமான முஸாஃபர் ஹிசாம் கூறுகையில், “இந்த விருது, எங்கள் வங்கியின் அர்ப்பணிப்பிற்கும், திறமைக்கும் கிடைத்த சான்றாகும். ஆசிய அளவில் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாகத் திகழும் எங்கள் வங்கி, தனது சேவையை நிறுவனங்கள் மற்றும் வட்டாரங்களைத், தாண்டிய சமூகத்திற்கும் சிறப்பு மிக்க பணியினை செய்து வருகின்றது.”
“அனைத்துலக நிதி விருதுகளை ஆசிய அளவில் எங்கள் வங்கி இரண்டாவது முறையாக பெறுகின்றது” என்று கூறியுள்ளார்.
மலாயன் இஸ்லாமிய வங்கி பற்றி அனைத்துலக நிதி வாரியம் கூறுகையில், “மலேசியா மலாயன் வங்கிக்கு பிரதான சந்தையாக இருந்தாலும், சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற அண்டை நாடுகளிலும் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
தற்போதய நிலையில் உச்சத்தில் இருக்கும் மலாயன் இஸ்லாமிய வங்கியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.