Home உலகம் அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவது இரண்டு மடங்காக அதிகரிப்பு!

அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவது இரண்டு மடங்காக அதிகரிப்பு!

765
0
SHARE
Ad

anலண்டன், மே 23 – உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப் பிரதேசமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகி வருவது, தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் உள்ள லீட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அண்டார்டிகா பனிப்பாறைகள் பகுதிகளில் குறித்து ஆய்வு நடத்தி முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மேலும் இதற்கான ஆதாரங்களை, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கிரோயோசாட்-2 செயற்கைக் கோள் உதவியுடன் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

2010 முதல் 2013 வரையில் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் 134 ஜிகா டன் பனிப் பாறை, கிழக்குப் பகுதியில் 3 ராட்சத பனிப்பாறைகள், அண் டார்டிகா தீபகற்பத்தில் 23 ஜிகா டன் பனிப்பாறைகள் உருகியுள்ளன. இதன் காரணமாக ஆண்டுக்கு சராசரியாக 159 ஜிகா டன் பனிப் பாறைகள் உருகி வருகின்றன.

#TamilSchoolmychoice

பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகி வருவதனால், இதன் கடல் நீர்மட்டம் ஒவ்வொரு ஆண்டும் 0.45 மில்லி மீட்டர் அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஆய்வை நடத்திய மூத்த விஞ்ஞானி டேவிட் வாகன் கூறுகையில், “பூமியில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக அண்டார்டிகா பனிப் பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை எடுக்கப்பட்ட ஆய்வைவிட இப்போதைய ஆய்வில் பனிப்பாறைகள் உருகுவது இரு மடங்காக அதிகரித் திருப்பது தெரிய வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.