அண்டார்டிகா: உலக நாடுகளில் கொவிட்-19 தொற்று முழுமையாக பரவி இருக்கும் இந்நிலையில், இப்போது அதிலிருந்து விடுப்பட்டிருந்த அண்டார்டிகாவிலும் கொவிட்-19 தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டார்டிகாவுக்கு சாதாரணமாக சுற்றுலாப் பயணிகளும், ஆய்வாளர்களும் செல்வது வழக்கம். கொவிட்-19 தொற்றுடன் ஓர் ஆண்டு காலமாக உலகம் போராடி வந்த நிலையில், இப்போது, சரியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் போது, இங்கிலாந்தில் புதிய கொவிட்-19 திரிபு பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பரவி வரும் தொற்றைக் காட்டிலும் இந்த புதிய நச்சுயிரி 70 விழுக்காடு அதிக வேகத்தில் பரவி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அண்டார்டிகாவில் சிலி நாட்டை சேர்ந்த ஆய்வு மையத்தில், சிலி இராணுவத்தை சேர்ந்த 26 பேருக்கும், 10 பராமரிப்பு ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.