Home One Line P2 ஆஸ்ட்ரோ: டிசம்பர் 21 – 27 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ: டிசம்பர் 21 – 27 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

842
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 27 வரையிலான ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகள் சிலவற்றின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

திங்கள், 21 டிசம்பர்

குருதி மழை (புதிய அத்தியாயங்கள் – 15-18)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: சி.குமரேசன், திலீப் குமார் & ஆமு திருஞானம்

கதிரும் எழிலும் கொலையாளியின் வீட்டிற்குச் சென்று வீடு காலியாக இருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். கொலையாளி அமைதியாக உள்ளார்.

யார்? (புதிய அத்தியாயங்கள் – 15-18)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மித்ராவின் அழகியத் தோற்றத்தைப் புகழ்ந்து யாழினியைப் பொறாமைப்பட வைக்க ஷமீன் முயற்சி செய்கிறார். கும்பலில் மிக முக்கியமான ஒருவரை சத்யா சந்திக்க நேரிடுகிறது.

மூன்றாவது கண் (புதிய அத்தியாயங்கள் – 6-9)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

உண்மை வெளிப்படுகின்றது! உணவு உண்பதற்காக நேஹாவை ரணா சந்திக்கிறார்.

வியாழன், 24 டிசம்பர்

டேன்ஜரஸ் (Dangerous) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: பிபாஷா பாசு & கரண் சிங் குரோவர்

காணாமல் போன தனது மனைவியைப் பதற்றமடைந்தக் கணவர் தேடுகிறார். அவர் அவளைக் கண்டுபிடிப்பாரா, அல்லது சில ஆபத்தான மறைக்கப்பட்ட ரகசியங்களைக் கண்டுபிடிப்பாரா?

வெள்ளி, 25 டிசம்பர்

பௌவ் பௌவ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மாஸ்டர் அயன் & தேஜஸ்வி

தனது செல்ல நாயையே உலகமாக எண்ணும் ஒரு சிறுவனின் கதை.

வால்டர் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / அலைவரிசை பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சிபி சத்தியராஜ், நடராஜ், சமுத்திரக்கனி, ரித்விக்கா, சனம் ஷெட்டி, முனிஷ்காந்த் & ஷிரின் காஞ்ச்வாலா

பிறந்தக் குழந்தையைத் தொலைத்த ஒரு தம்பதியர், வால்டர் எனும் ஒரு சிறிய நகரக் காவல்துறை அதிகாரியை அணுகுகின்றனர். வால்டரின் விசாரணை ஆழமடையும்போது, அவர் ஒரு பெரியச் சதியைக் கண்டுபிடிக்கிறார்.

சனி, 26 டிசம்பர்

அபிமான் (Abhimaan) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அஸ்ரானி & பிந்து

சுபீர் எனும் ஒரு பாடகர் தனது மனைவி, உமாவை அவளது பாடகித் தொழிலைத் தொடர ஊக்குவிக்கிறார். இருப்பினும், அவரை விட அவரது மனைவி பிரபலமடையும்போது விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன.

ஞாயிறு, 27 டிசம்பர்

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 7)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

சமையல்காரர்: சாந்தி ராஜ்

தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர்.

இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை