கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 22) கோலாலம்பூர் மாநகர் மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தரகுமார் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் “பிபிஆர்” எனப்படும் மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உறுதிக்கடிதங்களை வழங்கினார்.
கணிசமான இந்தியர்கள் உட்பட பல இன மக்களுக்கும் இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக எட்மண்ட் சந்தரகுமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
“மக்களுக்கான சேவைகளில் எப்போதும் முதல் கவனம் செலுத்தி வரும் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம், தொடர்ந்து கொவிட்-19 பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத் திட்டங்களை, கூட்டரசுப் பிரதேச அமைச்சும், கோலாலம்பூர் மாநகர் மன்றமும் இணைந்து மேற்கொண்டுவரும்” எனவும் சந்திரகுமார் மேற்கொண்டு தெரிவித்தார்.
சந்தரகுமார் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படக் காட்சிகளை இங்கே காணலாம்: