Home தொழில் நுட்பம் ஆண்டிராய்டு திறன்பேசிகள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட்!

ஆண்டிராய்டு திறன்பேசிகள் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட்!

447
0
SHARE
Ad

nokiaandroidsmartphoneமே 23 –  மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மற்ற செல்பேசி தயாரிப்பாளர்களை போன்று ஆண்டிராய்டு இயங்குதளங்களில் இயங்கும் திறன்பேசிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்ப இணையத்தளங்கள் ஆரூடங்கள் கூறுகின்றன.

சம காலத்தில், தொழில்நுட்பச் சந்தைகளில் அறிமுகமாகும் பல்வேறு இயங்குதளங்களைக் கொண்ட திறன்பேசிகளுள் ஆண்டிராய்டு திறன்பேசிகளுக்கே, பயனர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்து வருகின்றது. மற்ற இயங்குதளங்களைக் காட்டிலும், ஆண்டிராய்டு மூலமாக பயனர் விரும்பும் செயலிகளை உருவாக்குதல் மிக எளிதாக இருக்கம் என்பதே இதற்கான முக்கிய காரணம். 

இதனைக் கருத்தில் கொண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஆண்டிராய்டு இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய திறன்பேசிகளின் தயாரிப்பில் களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், இதனைக் கருத்தில் கொண்டே, பிரபலமான நோக்கியா நிறுவனமும் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

நோக்கியா X மற்றும் நோக்கியா XL போன்ற திறன்பேசிகளின் வரிசையில் மைக்ரோசாஃப்ட், தனது புதிய திறன்பேசிகளைத் தயாரிக்கும் எனக் கூறப்படுகின்றது.

இதனை மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் நோக்கியா செல்பேசிகளின் தயாரிப்புப் பிரிவு பொறுப்பெடுத்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். .