Home உலகம் ஆசிய விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: சீனா மறைமுக எச்சரிக்கை!  

ஆசிய விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு: சீனா மறைமுக எச்சரிக்கை!  

574
0
SHARE
Ad

ji jinpingபெய்ஜிங், மே 23 – தென் சீனக் கடல் எல்லைப் பிரச்சனைகளில் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு ஆசிய நாடுகள் ஒன்றிணைவது குறித்து, சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்சீனக் கடலில் உள்ள தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடுவதில் ஜப்பான், வியட்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுடன் சீனாவுக்கு தொடர் பிரச்சினை இருந்து வருகின்றது. அவ்வபோது மற்ற நாடுகளின் கடல் பகுதிகளில் சீனா தனது ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

சீனாவின் நிலைப்பாட்டை உணர்ந்த மற்ற மூன்று நாடுகளும் அமெரிக்காவின் உதவியை நாடின. இதைத் தொடர்ந்து அந்நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்கா இராணுவ பயிற்சியும் நடத்தி வருகின்றது. இது சீனாவின் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

“அண்டை நாட்டுக்கு எதிராக மூன்றாவது நாட்டுடன் இணைந்து இராணுவ பயிற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் நமது வட்டாரத்தில் நிலவி வருவது, பொது அமைதிக்கு உகந்தது அல்ல. ஆசிய பகுதியில் நம்மைத் தவிர பிற நாடுகளுக்கு இடம் கொடுப்பது நமது வலிமையையும், ஒற்றுமையையும் மெதுவாகக் கெடுத்து விடும்” என்று கூறியுள்ளார்.