Home One Line P2 சீனாவுக்கு எதிராக தென் சீனக் கடலில் இந்தியப் போர்க்கப்பல்

சீனாவுக்கு எதிராக தென் சீனக் கடலில் இந்தியப் போர்க்கப்பல்

960
0
SHARE
Ad

புதுடில்லி : தங்களின் முன்னணி போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை தென் சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மற்றொரு துணிச்சலான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கில் சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து தெற்கு லடாக்கில் 20 இந்திய இராணுவத்தினர் இறந்தனர். சீனா தரப்பிலும் உயிருடற்சேதம் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. எனினும் எண்ணிக்கையை சீனா குறிப்பிடவில்லை.

அமெரிக்கா மட்டும் சீனாவின் உயிருடற்சேதம் 40 பேர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிட்டது.

#TamilSchoolmychoice

இந்தியாவின் போர்க்கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் செயல்படுகின்றன என சீனா தொடர்ந்து புகார் கூறி வந்துள்ளது.

எனினும் இந்தியா தனது முன்னணி போர்க்கப்பல் ஒன்றை அந்தக் கடல் பகுதியில் நிறுத்துவதாக இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் இந்தியப் போர்க்கப்பல் அந்தப் பகுதியில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுவும் சீனாவின் கோபத்தைக் கிளறியுள்ளது என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் கடல் பகுதியில் குறிப்பாக மலாக்கா நீரிணையில் சீனப் போர்க்கப்பல்கள் அதிகமாகப் பயணம் மேற்கொள்ளும் பகுதியில் தனது போர்க்கப்பலை இந்தியா நிறுத்தியுள்ளது.