புது டில்லி: இந்தியா மற்றும் சீனா எல்லைப் பிரச்சனைகள் பல வாரங்களாகக் கடந்து போன நிலையில், அண்மையில் பேச்சுவார்த்தையின் மூலமாக சுமூகமான முடிவு எட்டப்படும் என்று இரு தரப்பும் பேசியிருந்த நிலையில், லடாக் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன இராணுவம் நடத்தியத் தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரி உட்பட 3 பேர் மரணமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் “விரிவாக்க செயல்முறை” ஒன்றின் போது இந்த மோதல் நடந்தது என்று கூறப்படுகிறது.
இறந்த மூன்று இந்திய துருப்புக்களில், ஒருவர் அதிகாரியாவர்.
இரு தரப்பு இராணுவ அதிகாரிகளும் நிலைமையைக் கட்டுப்படுத்த விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்திய தரப்பு “ஒருமித்த கருத்தை கடுமையாக மீறியுள்ளது” என்று கூறியுள்ளது.
“சட்டவிரோதமாக இரண்டு முறை எல்லை தாண்டி சீன வீரர்கள் மீது ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் இரு தரப்பினரின் ஒருமித்த கருத்தை இந்திய துருப்புக்கள் கடுமையாக மீறியுள்ளன. இதன் விளைவாக கடுமையான உடல் மோதல்கள் ஏற்பட்டன.” என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.