Home One Line P1 நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்காததால் 17 கட்டுமானத் தளங்கள் மூடப்பட்டன

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்காததால் 17 கட்டுமானத் தளங்கள் மூடப்பட்டன

529
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏப்ரல் 20 முதல் ஜூன் 14 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்கத் தவறியதாகக் கண்டறியப்பட்ட 17 கட்டுமான தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்த காலகட்டத்தில் மலேசிய கட்டுமான தொழில் மேம்பாட்டு ஆணையம் ஆய்வு செய்த 7,699 இடங்களில், இவை இருந்ததாக பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் தெரிவித்தார்.

கூடுதலாக, மொத்தம் 370 இணக்கமற்ற கட்டுமான தளங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக, புக்கிட் பிந்தாங் சிட்டி சென்டர் திட்ட தளத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கட்டுப்பாடுகளுக்கு இணங்காததைத் தவிர, கட்டுமான நிறுவனங்கள் மாநில அரசிடமிருந்து இயக்க ஒப்புதல் பெறாதக் காரணத்தினாலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.