Home One Line P1 நஜிப் ரசாக்கிற்கு எதிரான 1எம்டிபி தணிக்கை அறிக்கை விசாரணைகள் தொடங்கியது

நஜிப் ரசாக்கிற்கு எதிரான 1எம்டிபி தணிக்கை அறிக்கை விசாரணைகள் தொடங்கியது

519
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான 1எம்டிபி தணிக்கை அறிக்கையின் திருத்தம் தொடர்பான விசாரணைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

நஜிப் தரப்பு வழக்கறிஞர் தலைவர் முகமட் ஷாபி அப்துல்லாவின் வேண்டுகோளின் பேரில், நேற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கறிஞர் ஒருவர் கொவிட் -19 பரிசோதனை மேற்கொண்டதால் இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டது.

வழக்கறிஞர் ரஹ்மாட் ஹஸ்லான் இறுதியாக பாதிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

“அவர் இன்ப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டார். ஆனால், கொவிட்19 பாதிப்பு இல்லை.” என்று ஷாபி இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

1எம்டிபி தொடர்பான நிதியில் 2.28 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட நஜிப்புக்கு எதிரான மற்றொரு வழக்கும், கொவிட் -19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

அவரது வழக்கறிஞர் தரப்பில் ஒருவர் கோவிட் -19 நோயாளியுடன் தொடர்பில் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.