மாஸ்கோ – உலகளவில் கொவிட்19 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய வழக்கு எண்ணிக்கை 8,003,021 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 435,619 ஆகவும் உள்ளது.
கொவிட்19 பாதிப்பிலிருந்து மொத்தம் 3,832,784 பேர் மீண்டுள்ளதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தோன்றிய இத்தொற்று உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதார வீழ்ச்சிகளை அது ஏற்படுத்தியுள்ளது. உலகில் அதிகமாகப் பாதிப்பக்கட்ட நாடுகளில் தொடர்ந்து அமெரிக்கா முதல் நிலையில் உள்ளது. அங்கு 2,182,950 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 118,283 பேர் மரணமுறுள்ளனர்.
அதற்கு அடுத்த நிலையில், பிரேசில், இரஷ்யா மற்றும் இந்தியா உள்ளன. பிரேசிலில் 891,556 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44,118 பேர் மரணமுற்றுள்ளனர்.
இந்தியாவில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 343,091- ஆக உயர்ந்துள்ளது. சுமார் 9,915 மரணங்கள் அங்கு பதிவாகி உள்ளன.