Home நாடு செல்லியல் குழுமத்தின் 63-வது தேசிய தின வாழ்த்துகள்

செல்லியல் குழுமத்தின் 63-வது தேசிய தின வாழ்த்துகள்

2003
0
SHARE
Ad

இன்று 63-வது தேசிய தினத்தைக் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்து வந்த பயணத்தில், நடந்து வந்த பாதையில் எத்தனையோ சோதனைகளையும் வேதனைகளையும், எல்லையில்லா மகிழ்ச்சியையும் அனுபவித்தோம்.

எத்தனையோ அரசியல் மாற்றங்கள்! எண்ணிலடங்கா வரலாற்று சம்பவங்கள்!

#TamilSchoolmychoice

ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு குறை! ஒரு குமுறல்! சில ஏக்கங்கள்! சில ஏமாற்றங்கள்! சில எதிர்பார்ப்புகள்!

எத்தனையோ பேர் இதை விட சிறந்த வாழ்க்கைத் தரம் தேடி – உயர்ந்த வருமானம் தேடி செல்வச் செழிப்புமிக்க மற்ற நாடுகளுக்குப் பறந்தோடி விட்டனர்.

அயல்நாடுகளுக்குக் குடியேறியவர்களாயினும், எது நடந்தாலும் தாய் மண்ணிலேயே வாழ்வோம், வீழ்வோம் என இங்கேயே இரண்டறக் கலந்து விட்டவர்களும் ஒரே ஓர் அம்சத்தில் கருத்தால் ஒன்றுபடுவர்!

“மலேசியாவைப் போல் வராது” என்ற உண்மையான, நெஞ்சில் அடித்தளத்தில் இருந்து வரும் வாசகம்தான் அது!

இயற்கை எழில் கொஞ்சும் பூமி, அதே சமயம் இயற்கைப் பேரிடர் எதுவும் தொட்டுப் பார்க்காத வரம் பெற்ற நாடு!

இரப்பர், செம்பனை, காய்கறிகள், தேயிலை, புகையிலை, மிளகு, பழங்கள், தென்னை, காட்டு மரங்கள், கோடிக்கணக்கான ஆண்டுகளாக பசுமை மாறாமல் இருக்கும் வன வளம் – இப்படியாக எல்லாம் ஒருங்கே அமைந்த ஒரு சிறிய நாடு உலகில் பார்க்க முடியுமா தெரியவில்லை!

ஆண்டு முழுவதும் கரைபுரண்டோடும் ஆறுகள், நாட்டைச் சுற்றிலும் நீண்ட அழகிய கடல் பகுதிகள், எண்ணெய் வளம் வழங்கும் மண்ணைக் கொண்ட சில பகுதிகள் – என அனைத்து இயற்கை வளங்களும் கொண்டிருக்கிறோம்.

உணவுகள், பழக்க வழக்கங்கள்,’திறந்த இல்ல உபசரிப்புகள்’ என நமக்கே உரிய அம்சங்கள் மற்ற நாடுகளில் பார்க்க முடியாதது!

அனைத்து மொழிகளுக்கும், மதங்களுக்கும் உரிய சட்டபூர்வமான அங்கீகாரமும் தரப்பட்டிருக்கிறது.

இந்த தேசிய தினத்தில் நமக்குக் வாய்த்திருப்பவைகளை எண்ணிப் போற்றுவோம்!

வாய்க்காத சிலவற்றை தொடர் போராட்டங்களாலும் கருத்துப் பரிமாற்றங்களாலும் மாற்றுவோம்!

மலேசியாவைக் கொண்டாடுவோம்!

அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துகள்!

-செல்லியல் குழுமம்