Home உலகம் பனிப்பாறைகள் கரைவதால் கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்!

பனிப்பாறைகள் கரைவதால் கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்!

1050
0
SHARE
Ad

அண்டார்டிகா: நாசா எனப்படும் அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம், கிழக்கு அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகும் அறிகுறிகளை கண்டு பிடித்துள்ளதாக, கோடார்ட் விண்வெளி மையத்தின் பனிப்பாறை நிபுணர், கேத்தரின் வால்கர் கூறினார். 

இக்கண்டத்தில் உள்ள வேறு இடங்களில் நிகழ்ந்த வியத்தகு மாற்றங்கள், கிழக்குப் பகுதியில் மட்டும் நிகழாமல் நீண்ட காலமாக ஒரே நிலையாக இருந்ததை இவர் குறிப்பிட்டார். ஆனால், தற்பொழுது இக்கண்டத்தின் கிழக்குக் கரையோரத்தில் பனிப்பாறைகள் கரைந்து நீராக வழிந்தோடுவதை காணமுடிகிறது என்றார்.

இந்த போக்கு தொடர்ந்தால், அது எதிர்காலத்தில் கடல் நீர் மட்டத்தினை உயர்த்தி, பல விதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

இது குறித்துப் பேசிய, நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கணிதம் மற்றும் கடல் விஞ்ஞான பேராசிரியர், டேவிட் ஹாலண்ட்,  “அண்டார்டிகாவின் பனிப்பொழிவுத் தொடர்ந்தால், உலகளாவிய கடல் மட்டத்தில் நீர் நிலை உயரும்” என அவரும் எச்சரித்தார். இப்பகுதியில் மேலும் துல்லியமான அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் டேவிட் தெளிவுப்படுத்தினார்.

தொலைதூரக்  கண்காணிப்புகளைக் காட்டிலும், நேரடியாக அப்பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து வருவது சிறப்பானதாக அமையும் என டேவிட் கூறினார்.  

இதற்கிடையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இத்தகைய காலநிலை மாற்றம் எச்சரிக்கைகளை தாம் “நம்பவில்லைஎன்று செய்தியாளர்களிடம் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.