Home உலகம் உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி கடலில் மிதக்கிறது

உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி கடலில் மிதக்கிறது

747
0
SHARE
Ad

இலண்டன்: 175 கிலோமீட்டர் நீளம், 25 கிலோமீட்டர் அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி அண்டார்டிகாவில் உள்ள அதன் அசல் இடத்திலிருந்து பிரிந்து இப்போது வெடெல் கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ -76 என அழைக்கப்படும் இந்த பனிக்கட்டியின் பரப்பளவு 4,320 சதுர கிலோமீட்டர் ஆகும். இது ஸ்பெயினில் மல்லோர்காவை விட பெரியது, பெர்லிஸை விட பெரியது மற்றும் கெடாவின் பாதி பரப்பளவைக் கொண்டுள்ளது.

ஏ-76 இன் அளவு ஏ-23ஏ- ஐ விட மிகப் பெரியது. இதுவே மிகப்பெரிய பனிக்கட்டியாக இருந்தது (சுமார் 3,380 சதுர கிலோமீட்டர் பரப்பளவு). இதுவும் இன்னும் வெட்டல் கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தெற்கு தென் அமெரிக்காவில் உள்ள பென்குயின் வாழ்விட தீவை அச்சுறுத்தும் அண்டார்டிகாவிலிருந்து இதேபோன்ற மற்றொரு பனிக்கட்டி அதன் இடத்திலிருந்து நகர்ந்து விட்டதாக விஞ்ஞானிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு புவி வெப்பமடைதலுடன் தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.