Home நாடு எல்ஆர்டி விபத்து: பிரசரனா தலைவராகப் பதவி விலக மறுத்தார் தாஜுடின்

எல்ஆர்டி விபத்து: பிரசரனா தலைவராகப் பதவி விலக மறுத்தார் தாஜுடின்

567
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரசரனா  தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் நேற்று இரவு எல்ஆர்டி விபத்துக்குப் பிறகு பதவி விலக வேண்டும் என்ற அழைப்புகளை நிராகரித்தார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 213 பேர் காயமடைந்த விபத்து நடந்த உடனேயே அவர் ஏன் சம்பவ இடத்தில் இல்லை என்பதையும் விளக்கினார். அவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சிறிது தாமதமாக தனக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். அதனால்தான் காலையில் முதலாவதாக இருப்பிடத்திற்கு செல்ல முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இன்று தாம் இரண்டாவது கொவிட் -19 தடுப்பூசி எடுக்க தயாராகி இருந்ததாகவும் வேண்டுமனே விஷயங்களைத் தூண்ட முயற்சிக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

“அமைச்சர் (போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (பிரசரணா தலைமை நிர்வாக அதிகாரி நோர்லியா நோவா) ஆகியோர் அங்கு இருந்தனர். எல்லோரும் அங்கே இருந்தார்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பயணிகளையும் எல்ஆர்டி சேவையையும் நாங்கள் கவனித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.