Home நாடு பாபுக், வெப்ப மண்டல சூறாவளி வட மலேசியாவைத் தாக்கும்!

பாபுக், வெப்ப மண்டல சூறாவளி வட மலேசியாவைத் தாக்கும்!

1320
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: வெப்ப மண்டல சூறாவளி, பாபுக் (Pabuk), தற்போது தாய்லாந்து மற்றும் வியட்னாமை தாக்கி வருகிற வேளையில், இந்த சூறாவளி மலேசியாவின் வடக்குப்பகுதியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, மற்றும் பேராக் மாநிலங்களில் இதனால் கடுமையான மழை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களில் ஜனவரி 4-ஆம் தேதி வரையிலும் கடுமையானமழைத்தொடரும் என மலேசிய வானியல் திணைக்களம் (MetMalaysia) தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதனை தெளிவாக விளக்கும் பட்சத்தில், வானியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வெள்ளிக்கிழமை வரைக்கும் இடையில் நிலவ இருக்கும் அபாயம் குறித்த விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது.

வலுவான காற்றும்,  கடல் கொந்தளிப்பும் கிளாந்தான், திரெங்கானு மற்றும் பகாங் மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பினாங்கு மாநில சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர், பீ பூன் போ கூறுகையில், கடந்தவாரமே அந்த அமைப்பு வெப்ப மண்டலபுயலை எதிர் கொள்ள தயாராகி விட்டதாகவும், இன்று காலையில் கிழக்கு கடற்கரைப் பகுதியைப் புயல் தாக்கியப் பிறகு,வடமேற்கு கடற்பகுதிகளில் புயல் தாக்கம் ஏற்படலாம் எனும் எச்சரிக்கை எழுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“எல்லா அமைப்புகளையும், நாங்கள் எச்சரிக்கை செய்துள்ளோம். இதற்கு பிறகு நடக்க இருப்பதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்என்று அவர் கூறினார்.

அவசரகாலச் சூழ்நிலையில் அல்லது எந்தவொரு உதவி தேவைப்பட்டாலும், பொதுமக்கள் 1300-22-1638 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்றார். 

வேகமாக சுழன்று வந்து கொண்டிருக்கும் இந்தப் புயல் அமைப்பிலான கடுமையான காற்று, கடல் கொந்தளிப்புகள், பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.