Home நாடு நாளைக்குள் எண்ணெய் விலை அறிவிக்கப்படும்!

நாளைக்குள் எண்ணெய் விலை அறிவிக்கப்படும்!

1002
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புப் பற்றியத் தகவலை அரசு நாளைக்குள் அறிவித்துவிடும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

எரிபொருள் விலை பற்றிய முடிவு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, நிதி அமைச்சர் லிம் குவான் எங், ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரோன் 95 மற்றும் இதர எரிபொருள் விலைகள் வாராந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதன் விளைவாக, மலேசிய எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் அமைப்பு, அரசாங்கத்தின் இந்த முடிவினை எதிர்த்தது. இதனைத் தொடர்ந்து, விரிவாகப் பேசப்படும் எனவும், எண்ணெய் விலையில் வருகிற வெள்ளிக்கிழமை வரையிலும் எந்தவொரு மாற்றமும் இருக்காது என நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். 

நேற்று அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு முன்பு, பிரதமர் மகாதீர் முகமட் அந்த அமைப்பின் தலைவரையும், பிரதிநிதிகளையும் 45 நிமிடங்களுக்கு சந்தித்தார்.