Home இந்தியா சபரிமலை: எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் பலி!

சபரிமலை: எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் பலி!

793
0
SHARE
Ad

திருவனந்தபுரம்: 50 வயதுக்கும் குறைவான இரு பெண்கள் புதன்கிழமை அன்று சபரிமலைக் கோயிலில் நுழைந்ததற்காக கேரளா முழுவதும் வன்முறை எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கேரளாவின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் ஆர்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.

கடந்த புதன்கிழமை இரண்டு பெண்கள் கோயிலில் நுழைந்த பின்னர், கேரளாவில் எதிர்ப்பு போராட்டம் மேலும் அதிகரித்தது. அந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமுற்ற ஒருவர் நேற்று இரவு மருத்துவமனையில் காலமானார்.

எதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலைகளைத் தடுத்து, பல்வேறு பகுதிகளில் கடைகள் மற்றும் சந்தைகளை மூடினர். திருவனந்தபுரத்திலிருந்து இவ்விவகாரத்தைப் பதிய வந்திருந்த பத்திரிகையாளர்கள் மீது பி.ஜே.பி தொண்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

பி.ஜே.பி கட்சியினர் நடத்திய வன்முறை ஆர்ப்பாட்டத்தில், கற்கள் வீசி எறியப்பட்டன. அப்படி எறியப்பட்ட கற்கள் சம்பந்தப்பட்டவரின் தலையில் பட்டதால் அவர் காலமானார்” என்று கேரள காவல் துறை அதிகாரி கூறினார்.

இந்தச் சம்பவத்தில் இதுவரையிலும், குறைந்த பட்சம் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.