Home நாடு 2002என்டி7 சிறுகோள் பூமியைத் தாக்காது!

2002என்டி7 சிறுகோள் பூமியைத் தாக்காது!

1046
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறுகோள் ஒன்று வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி பூமியைத் தாக்க உள்ளதாக வெளியானச் செய்தியை தேசிய விண்வெளி முகமை (Angkasa) மறுத்துள்ளது.

‘2002NT7’ என பெயரிடப்பட்டுள்ள அச்சிறுகோள் அமெரிக்க விண்வெளி நிறுவனமான, நாசாவால், 2002-ஆம்ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என அறிக்கை ஒன்றின் வாயிலாக அது தெரிவித்தது.

வானியல் கோட்பாட்டின் அடிப்படையில் நாசா கணக்கீடுகளைக் கணக்கிட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி அச்சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளதாக அறிவித்திருப்பதை விண்வெளி முகமைக் குறிப்பிட்டது. 

#TamilSchoolmychoice

எனினும், மீள் கண்காணிப்பு மற்றும் மறு மதிப்பீடு மூலம், பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும், கிட்டத்தட்ட சாத்தியமற்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்தது.

இது சம்பந்தமாக, பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், போலியான செய்திகளைப் படித்து, தகவலை பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நேற்று, மலேசியாவின் குறிப்பிட்ட ஒரு செய்தி ஊடகம் வருகிற பிப்ரவரி மாதம், ‘2002NT7’ எனும் சிறுகோள் பூமியைத் தாக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது.