Home வணிகம்/தொழில் நுட்பம் மைடிவி இலவச ஒளிபரப்புச் சேவை மாத தொடக்கத்தில் ஆரம்பம்!

மைடிவி இலவச ஒளிபரப்புச் சேவை மாத தொடக்கத்தில் ஆரம்பம்!

880
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மைடிவி ஒளிபரப்பு சேவை (MYTV Broadcasting Sdn. Bhd), 1.5 மில்லியன் இலவச டிகோடர்களை இந்த மாதத் தொடக்கத்தில் நாடு முழுவதும் வழங்க இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பெறுனர்கள் மைடிவியின் இலவச டிகோடர்களைப் பெறுவதற்கு அறிவிப்புக் கடிதங்களை பெற்றிருக்க வேண்டும் என அதன் தலைமை நிருவாக அதிகாரி மைக்கேல் சான் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பெறுனர்கள், மைடிவியின் இலவச டிகோடர்களைப் பெற, மைடிவி நிறுவனத்தை தொடர்புக் கொண்டு தங்கள் தகுதியைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

பந்துவான் சாரா ஹிடுப் ரக்யாட் (Bantuan Sara Hidup Rakyat) திட்டத்தின் வாயிலாக பதிந்துள்ள, குறைந்த வருமானம் பெறுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மைடிவி நிறுவனம் கடந்த வாரம் வாடிக்கையாளர்களிடமிருந்து அளவுக்கு அதிகமான தொலைப்பேசி அழைப்புகளைப் பெற்றதால், இந்த அறிவிப்பு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார் .

அறிவிப்புக் கடிதங்களைப் பெற்றவர்கள் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பலைகள் வழியாக தங்கள் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்: MYTV Customer Careline (1300-80-6988); Facebook via PM only (MYTV Broadcasting); email (careline@mytvbroadcasting.my); and WhatsApp/SMS: 011-5200 6988.