Home One Line P1 மெர்சிங் மக்கள் தூய்மையைப் பேண வேண்டும்- ஜோகூர் சுல்தான் சாடல்

மெர்சிங் மக்கள் தூய்மையைப் பேண வேண்டும்- ஜோகூர் சுல்தான் சாடல்

567
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: மெர்சிங் மாவட்டத்தில் ஒரு சிலரின் அணுகுமுறையால் தூய்மையற்று இருக்கும் கடற்கரைப் பகுதிகள் குறித்து, சுல்தான் இப்ராகிம் விமர்சித்துள்ளார். பொது மக்கள் தூய்மையை புறக்கணிப்பதால், பொது இடங்கள் குப்பைகளால் நிறைந்திருக்கிறது என்று அவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மெர்சிங் ஒரு சுற்றுலா மாவட்டமாகும் என்றும், இது வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் மையமாக மட்டுமல்லாமல், இயற்கை அழகைக் கொண்டதாகவும் இருப்பதாக அவர் கூறினார். இந்த பழக்கம் தொடர்ந்தால், அது பொது சுகாதார அம்சங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.

“ஒரு சில பகுதிகளில் நான் கண்டதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறேன். மெர்சிங் ஒரு சுற்றுலா இடமாக இருக்க வேண்டும், ஆனால் சுற்றுலாப் பயணிகள் வரும்போது அவர்கள் குப்பைகளால் வரவேற்கப்படுகிறார்கள். நம் சொந்த வீடு குப்பையாக இருக்கும் போது மக்களை அழைக்க நாம் வெட்கப்படுகிறோம். உங்கள் நடத்தையை மாற்றி, அழுக்கான அணுகுமுறையிலிருந்து விடுபடுங்கள்,” என்று சுல்தான் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மெர்சிங் சுற்றுச்சூழல் சுற்றுலாத்துறையில் மேலும் வளர்ச்சிக்கு பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் இது சுற்றுலா தீவுகளுக்கு முக்கிய நுழைவாயிலாகும். மெர்சிங்கில் இந்தத் துறைக்கு முதலீடு மற்றும் முன்னேற்றத்தை ஈர்ப்பதற்கு எனக்கு பல்வேறு யோசனைகள் உள்ளன. ஆனால், இங்கு தூய்மையைப் பேணுவதில் மக்களும் பங்கு வகிக்க வேண்டும். யாரும் அழுக்கு இடங்களைப் பார்வையிட விரும்பமாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

மக்கள் அதிக ஒழுக்கத்துடன் இருக்க உள்ளூர் அதிகாரிகள் இந்த அபராதங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் சுல்தான் இப்ராகிம் கூறினார்.