கோலாலம்பூர்: பழுதடைந்த சாலைகள், குழிகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்று பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) கூறியுள்ளது.
சாலை பயனர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக முன்னுரிமையாக எடுக்கப்பட்ட ஒவ்வொரு புகாரையும் கொண்டு, நாட்டின் அனைத்து சாலைகளின் நிலையை கண்காணிக்க அவர்கள் எப்போதும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்று ஜேகேஆர் இயக்குநர் டத்தோ முகமட் சுல்கிப்ளி சுலைமான் தெரிவித்தார்.
ஜேகேஆருக்கு புகார்களை அனுப்ப 11 வழிமுறைகள் இருப்பதாக சுல்கிப்ளி கூறினார்.
இதில் aduan.jkr.gov.my என்ற வலைத்தளம், தொலைபேசி வழியாக, kkr.spab.gov.my இல் உள்ள பொது புகார்கள் மேலாண்மை அமைப்பு (SISPAA), aduan.jkr@1govuc.gov.my/ komunikasi.jkr@1govuc என்ற மின்னஞ்சல்களும் அடங்கும்.
“இது கூட்டரசு, மாநில அல்லது மாவட்ட சாலை என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு புகாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பப்படும்,” என்று திங்கட்கிழமை (டிசம்பர் 28) இரவு தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுல்கிப்ளி கூறினார். .
புகார்களுக்கு எப்போதும் பதிலளிக்கும் அனைத்து ஜேகேஆர் மாவட்ட பொறியியலாளர்களுக்கும் அதன் சமூக ஊடக நிர்வாகிகளுக்கும் சுல்கிப்ளி நன்றி தெரிவித்தார்.
சாலைகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான, கண்கள் மற்றும் காதுகளாக செயல்பட்ட பொது மக்கள் மற்றும் ஜேகேஆரின், ராக்கான்கேகேஆர் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
“மேம்படுத்தும் எண்ணத்துடன் அனைத்து பரிந்துரைகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் திறந்த இதயத்துடன் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.