Home One Line P1 ஊழலை ஒழிக்கும் விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி தோல்வியடைந்தது

ஊழலை ஒழிக்கும் விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி தோல்வியடைந்தது

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் தலைமையில், 22 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கான உறுதியை மக்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் தவறிவிட்டது என்று நம்பிக்கை கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

அந்த நேரத்தில் நம்பிக்கை கூட்டணி 1எம்டிபி பிரச்சனையில் தேசிய முன்னணி நிர்வாகத்தை விமர்சித்தது. அதே போல் அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழலையும் பேசியது என்று அன்வார் கூறினார்.

“அதுவே தங்கள் கட்சித் தலைவர் என வரும்போது ஒரு மென்மையான அணுகுமுறையை எடுத்துள்ளோம். ஆம், ஊழல், 1எம்டிபி பிரச்சனை, அம்னோ தலைவர்களிடையே ஊழல் பிரச்சனை குறித்து நாங்கள் கடுமையாக இருந்தோம். ஆனால், நம் பிரிதிநிதிகளிடையே நிறைய ஊழல்களை நாங்கள் பொறுத்துக்கொண்டோம். இதனால்தான், நாம் இழந்தோம் என்று சொல்கிறேன்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், மாற்றத்தை விரும்பியதால் மக்கள் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை தேர்வு செய்தனர்.

முந்தைய அரசாங்கத்தை விட நம்பிக்கை கூட்டணி சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதை மக்களை நம்ப வைக்க பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“நாம் அரசாங்கமாக மாறும்போது, ​​நாம் வேறுபட்ட அணுகுமுறையைக் காட்ட வேண்டும். நம் திட்டங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தால் (முந்தைய நிர்வாகத்துடன்), கொஞ்சம் சிறப்பாக இருந்தால், குறைவான ஊழல் ஏற்பட்டால், மக்களுக்கு இன்னும் கொஞ்சம் உதவி செய்தால், இதற்கு பெயர் சீர்திருத்தம் அல்ல. நாம் ஒரு சிறந்த அடித்தளத்தை அமைத்திருக்க வேண்டும். இதுதான் மக்களை ஏமாற்றமடையச் செய்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.