Home One Line P1 நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற துன் மகாதீரை அழைக்கலாம்

நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற துன் மகாதீரை அழைக்கலாம்

397
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட, கூட்டணி கொள்கையை கடைபிடிக்கும் அனைவருடனும் ஒன்றாக வேலை செய்ய நம்பிக்கை கூட்டணி அழைக்கிறது.

ஆனால், சம்பந்தப்பட்ட தரப்பினர் தனிப்பட்ட காரணத்தையும், சேதத்தையும் கொண்டு வர முடியாது என்று நம்பிக்கை கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“நான் இதனை நம்பிக்கை கூட்டணியிடம் விட்டுவிடுகிறேன். யார் வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால், கொள்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். தனிப்பட்ட காரணங்களைக் கொண்டு வந்து பழைய சிதைவைத் தொடர வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டை வழிநடத்துவதற்கு டாக்டர் மகாதீரின் விருப்பம் குறித்து கேட்டபோது, ​​இந்த கேள்வி பொருத்தமற்றது என்றும், பிரதமராக விரும்பும் எவருக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் நல்லாட்சியை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அன்வார் விவரித்தார்.

“என்னைப் பொறுத்தவரை கேள்வி பொருத்தமற்றது. யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தாலும், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும், குடும்பங்களையும் நண்பர்களையும் பாதுகாக்காமல் இருக்க வேண்டும். கிராமப்புற, ஓரங்கட்டப்பட்ட சமூகங்களில் ஏழைகளின் துன்பங்களுக்கு போராடவும் உதவவும் உறுதியளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.