Home One Line P1 கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை

கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை

613
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முக்கிய நீர் குழாய் உடைந்ததால் இன்று பிற்பகுதியில் கிள்ளான், ஷா ஆலாம் மற்றும் பெட்டாலிங் பகுதிகளுக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

ஷா ஆலாம் செக்‌ஷேன் 15-இல் உள்ள முக்கிய நீர் குழாய் உடைந்ததால் இந்த தடை ஏற்பட்டதாக ஆயர் சிலாங்கூர் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

பழுதுபார்க்கும் பணிகள் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த, ஆயர் சிலாங்கூர் மதியம் 1 மணிக்கு தொடங்கி நீர்வழங்கலை நிறுத்தும்.

#TamilSchoolmychoice

“இந்த தடையினால் கிள்ளான், ஷா ஆலாம் வட்டாரங்களில் 58 பகுதிகளிலும், பெட்டாலிங்கில் 72 பகுதிகளிலும் திட்டமிடப்படாத நீர் இடையூறை ஏற்படுத்தும்” என்று அது கூறியது.

பழுதுபார்க்கும் பணிகள் இன்று இரவு 9 மணிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நீர் நிறுத்தப்படுவதற்கு முன்னர் போதுமான தண்ணீரை சேமித்து வைக்கவும், திட்டமிடப்படாத நீர்த் தடை காலத்தில் விவேகத்துடன் தண்ணீரைப் பயன்படுத்தவும் பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது,” என்று ஆயர் சிலாங்கூர் கூறியது.