Home One Line P1 குழாய் உடைந்ததால் கிள்ளான், ஷா ஆலாமில் நீர் விநியோகத் தடை

குழாய் உடைந்ததால் கிள்ளான், ஷா ஆலாமில் நீர் விநியோகத் தடை

532
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குழாய் உடைந்ததால், கிள்ளான் மற்றும் ஷா ஆலாமில் சில பகுதிகளுக்கு திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30 மணிக்கு கிள்ளானில் உள்ள ஜாலான் செருலிங் 59, தாமான் அண்டாலாசில் குழாய் உடைப்பு ஏற்பட்டது என்று நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி கூறினார்.

கிள்ளான் மற்றும் ஷா ஆலாமில் பாதிக்கப்பட்ட 12 பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

“பாதிக்கப்பட்ட பகுதிகள் தாமான் செந்தோசா, ஜாலான் ராஜா நோங், ஜாலான் பெண்டஹாரா, ஜாலான் பெந்தாரா, ஜாலான் சுங்கை ஜாதி, ஜாலான் தெமெங்கோங், ஜாலான் லக்சமனா, தாமான் பிஜயா, தாமான் ரக்யாத், ஜாலான் செரி சரவாக், பண்டார் புத்ரி மற்றும் பண்டார் புத்ரா 2, கிள்ளான்,” என்று அவர் கூறினார்.

இன்று காலை ஆயர் சிலாங்கூரின் முகநூல் பக்கத்தில், அதிகாலை 3.50 மணிக்கு பழுதுபார்ப்பு முடிந்ததாக கூறப்படுகிறது.

சில பகுதிகளில் காலை 6.50 மணி முதல் நீர் விநியோகம் மீட்டமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கு, இருப்பிடம் மற்றும் நீர் அழுத்த மட்டத்தைப் பொறுத்து நீர் விநியோகம் சீராகும் என்று அது குறிப்பிட்டிருந்தது.

மாலை 5 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்படலாம்.