Home One Line P1 ஐபிஎப் பொதுத் தேர்தலில் தேமு சார்பாக நிறுத்தப்படலாம்!

ஐபிஎப் பொதுத் தேர்தலில் தேமு சார்பாக நிறுத்தப்படலாம்!

490
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை, 15-வது பொதுத் தேர்தல் இட ஒதுக்கீட்டின் போது மதிக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.

“தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் நிலையை மதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் பழையவர்கள் மட்டுமல்ல, பெரிய கூட்டணியும் கூட. தேசிய முன்னணி 15-வது பொதுத் தேர்தலுக்குள் இன்னும் பல கட்சிகளுடன் தொடர்ந்து பேசும். பல அரசியல் கட்சிகளுடன், குறிப்பாக தேசிய கூட்டணி அரசாங்கத்தில் 12 அரசியல் கட்சிகளுடன் வெளிப்படையான அணுகுமுறையை எடுக்கும்,” என்று அவர் கூறினார்.

டிசம்பர் 14-ஆம் தேதி, பெர்சாத்துவுடனான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், போட்டியிட வேண்டிய இடங்கள் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றும் தேசிய கூட்டணி ஒப்புக் கொண்டதாக அனுவார் கூறினார். அதே நேரத்தில் அம்னோ மற்றும் பாஸ் இடையேயான இரண்டு பேச்சுவார்த்தைகள் சுமார் 60 முதல் 70 விழுக்காடு வரை முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, தேசிய முன்னணி ஆதரவு கட்சியான ஐபிஎப்பை புதிய உறுப்பினராக ஏற்றுக்கொள்வதற்கு தேசிய முன்னணியில் ஒருமித்த கருத்து உள்ளதால், ஐபிஎப் தொடர்ந்து ‘தேசிய முன்னணி நண்பர்கள்’ வட்டத்தில் தொடரும் என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தேசிய முன்னணி தலைவர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி, ஐபிஎப் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்ற சாத்தியக்கூறுகள் இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். அத்தொகுதியில் அவர்கள் வெற்றிப் பெற வாய்ப்புகள் இருப்பின், இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று அவர் கூறினார்.