வாஷிங்டன்: அமெரிக்காவில் டிபானி டோவர் எனும் 30 வயதான தலைமை செவிலியர் ஒருவர் முதலாவதாக கொவிட்-19 தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டதை அடுத்து, அதன் அவசியம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.
இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள் தள்ளியது. அமெரிக்காவை சேர்ந்த பிபைசர் ஜெர்மனியின் பயோன்டெக், மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பு மருந்துகள் அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தடுப்பு மருந்து பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் அமெரிக்காவில் விவாதப் பொருளாகி உள்ளது. ஆனால், டிபானி டோவர் எப்போது ஊசி போட்டாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல், மயங்கி விழுந்து விடுவார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
வலியைத் தாங்க முடியாத போது தனக்கு எப்போதும் மயக்கம் வருவது உண்டு என்றும் டிபானி கூறியுள்ளார்.