Home One Line P1 ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவதிலிருந்து பின்வாங்கல்

ரஜினிகாந்த் கட்சித் தொடங்குவதிலிருந்து பின்வாங்கல்

609
0
SHARE
Ad

சென்னை: கொவிட்-19 தொற்றுக் காரணமாக தாம் கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியாததை ரஜினிகாந்த் இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டிசம்பர் 31-ஆம் தேதி கட்சித் தொடங்குவதை அறிவிப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும்  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

தேர்தல் காலத்தில் தாம் இலட்சக்கணக்கானவர்களைச் சந்திக்க நேரிடும் என்றும், இப்போது தாம் இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு முறை தொற்று ஏதேனும் ஏற்பட்டால் அது தம்மை சுற்றி இருப்பவர்களைப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்,” என்று ரஜினிகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.