Home One Line P1 பிளாஸ்: நெடுஞ்சாலையில் நெரிசலைத் தவிர்க்க பயண நேர அட்டவணை வெளியீடு

பிளாஸ்: நெடுஞ்சாலையில் நெரிசலைத் தவிர்க்க பயண நேர அட்டவணை வெளியீடு

490
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நீண்ட வார விடுமுறை நாட்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஏற்படும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக பிளாஸ் மலேசியா பெர்ஹாட் இன்று பரிந்துரைக்கப்பட்ட பயண நேர அட்டவணையை வெளியிட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்த நேர அட்டவணை 22 டிசம்பர் முதல் ஜனவரி 19 வரையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

“கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து பெர்லிஸ், கெடா, வடக்கு பேராக் மற்றும் ஜோகூர் போன்ற இடங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலை பயனர்கள் காலை 9 மணிக்கு முன்னர் நெடுஞ்சாலையில் நுழைய அறிவுறுத்தப்படுகிறார்கள். கிழக்கு கடற்கரை, மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களுக்குச் செல்வோர் மதியம் 12 மணிக்குப் பிறகு நெடுஞ்சாலையில் நுழைய வேண்டும். கிள்ளான் பள்ளத்தாக்குக்கு திரும்பியதும், அனைத்து பயனர்களும் காலை 9 மணிக்கு நெடுஞ்சாலைக்குள் நுழையுமாறு பிளாஸ் நேர அட்டனவணை அறிவுறுத்துகிறது, ” என்று பிளாஸ் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரித்துள்ளது.

#TamilSchoolmychoice

வாடிக்கையாளர்கள் அவர்களின் டச் கோ கார்டில் போதுமான இருப்பு இருப்பதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்துகிறது.