Home One Line P1 நெடுஞ்சாலை, மாநில சாலைகளை காவல் துறை கண்காணிக்கும்

நெடுஞ்சாலை, மாநில சாலைகளை காவல் துறை கண்காணிக்கும்

667
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதை அடுத்து நாட்டில் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற பட்சத்தில் நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் நெரிசல்கள் ஏற்படாமல் இருக்க காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை நிர்வாகம் கண்காணிக்கும்.

இவ்வார இறுதியில் மலேசியர்கள் தங்கள் வீடுகளுக்கு அல்லது சொந்த ஊர்களுக்கு செல்லவும், சுற்றுலாக்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கலாம், இதன் அடிப்படையில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வார இறுதியில் அதிகமான வாகனங்கள் சாலைகளில் பயணிக்கலாம் எனும் அடிப்படையில் சிலாங்கூர் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணைகள் தலைவர், நெரிசலை தவிர்ப்பதற்காக காவல் துறை ‘ஓப்ஸ் லன்சார்’ நடவடிக்கையை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் அதிகமான காவல் துறையினரே சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் நிறுத்துவோம். வாகன ஓட்டுனர்கள் சரியான முறையில் வாகனங்களை செலுத்தவும், நெறியுடன் இருக்கவும் இது உதவுகிறது.”

“மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும், போக்குவரத்து நடைமுறைகளை விதிமுறைகளையும் மதித்து செயல்படவேண்டும்.” என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த மாதத்தைக் காட்டிலும் வாகனங்களில் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரிக்கும் என்று பிளாஸ் நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது.