Home One Line P1 கட்டுப்பாட்டு ஆணையால் பிளாஸ் நிறுவனம் 400 மில்லியன் இழப்பீட்டை சந்தித்துள்ளது

கட்டுப்பாட்டு ஆணையால் பிளாஸ் நிறுவனம் 400 மில்லியன் இழப்பீட்டை சந்தித்துள்ளது

594
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் பரவலால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தியதைத் தொடர்ந்து மார்ச் முதல் 3 மாதங்களில் பிளாஸ் மலேசியா பெர்ஹாட் சுமார் 400 மில்லியன் ரிங்கிட் இழப்பை சந்தித்தது.

நிறுவனத்தின் செயல்பாட்டின் கீழ் நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு குறைந்ததாக பிளாஸ் நிர்வாக இயக்குனர் அஸ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.

“எங்கள் வருவாய் 90 விழுக்காடு குறைந்துள்ளது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஜூன் 6 முதல் மீண்டும் மாநிலத்தை கடக்க அரசாங்கம் அனுமதி அறிவித்த பின்னர் அது மீண்டும் அதிகரித்தது.

#TamilSchoolmychoice

“(இருப்பினும்), 400 மில்லியன் ரிங்கிட்டை மீட்டெடுக்க முடியாது. இது நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களை மறைமுகமாக பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

பிளாஸ் நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை இப்போது ஒரு நாளைக்கு 1.5 மில்லியனாக அதிகரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் மலேசியா-சிங்கப்பூர் எல்லையை அரசாங்கம் முழுமையாக திறந்தால் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.