Home One Line P1 கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

680
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெட்டாலிங், கிள்ளான் மற்றும் ஷா ஆலாம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நீர் விநியோக தடை இன்று காலை 6 மணிக்கு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.

ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி கூறுகையில், திட்டமிடப்பட்ட நீர் வழங்கல் நிறுத்தப்பட்ட காலகட்டத்தில் பயனீட்டாளர்களின் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

“சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் குழாய்களில் கசிவு அல்லது உடைப்பு சம்பவங்கள் குறித்து பொது மக்கள் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை ஆயர் சிலாங்கூர் உறுதிப்படுத்தும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மார்ச் 30-ஆம் தேதி ஷா ஆலாமில் பெர்சியாரான் சிலாங்கூர் பிரிவு 15- இல் உள்ள கார்ல்ஸ்பெர்க் தொழிற்சாலைக்கு அருகில் பழைய குழாய்களை அகற்றி இணைப்பதற்கான பணிகள் காரணமாக நீர் விநியோக தடை ஏற்பட்டது.