Home Featured நாடு மகாதீர் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்!

மகாதீர் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்!

700
0
SHARE
Ad

Tun Mahathir

கோலாலம்பூர் – சில நாட்கள் கோலாலம்பூர் இருதய மருத்துவமனையில் நெஞ்சில் ஏற்பட்ட தொற்று காரணமாக சிகிச்சை எடுத்து வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் இன்று இல்லம் திரும்பினார். எனினும் அவருக்கு தொடர்ந்து வீட்டிலேயே உடல் தசைகளுக்கு வலு சேர்க்கும் உடம்பு பிடித்து விடும் சிகிச்சைகள் (physiotherapy) மற்றும் உடற்பயிற்சிகள் வழங்கப்படும் என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

91 வயதான மகாதீர் இன்று மாலை 4.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

#TamilSchoolmychoice

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மகாதீர், ஆகஸ்ட் 9 முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

1989இல் முதன் முதலாக இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மகாதீர் பின்னர், 2007இல் இரண்டாவது முறையாக இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.

புதிய கட்சி தொடங்கப்பட்ட நேரத்தில் மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, அவரது ஆதரவாளர்களிடையே சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், தற்போது உடல்நலம் பெற்று அவர் இல்லம் திரும்பியிருக்கின்ற காரணத்தால், புதிய கட்சி அமைப்பாளர்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மீண்டும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.