Home Featured கலையுலகம் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து இரண்டாவது திருமணமா?

நகைச்சுவை நடிகர் மதுரை முத்து இரண்டாவது திருமணமா?

637
0
SHARE
Ad

Madurai Muthuசென்னை –  ‘அசத்தப்போவது யாரு’ புகழ் மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, ‘விகடன்’ உட்பட தமிழகத்தின் முக்கிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், அதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம், அவரது முதல் மனைவியான வையம்மாள், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார்.

#TamilSchoolmychoice

அந்த சமயத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த மதுரை முத்து, தகவல் அறிந்து நிகழ்ச்சியை இரத்து செய்து விட்டு மதுரை திரும்பினார்.

அதன் பின்னர், மனைவியைப் பிரிந்த சோகம் குறித்து பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அதோடு, கடந்த ஜூன் மாதம் வரை, அவ்வப்போது தனது பேஸ்புக்கில் மனைவியின் நினைவுகளைப் பகிர்ந்து வந்தார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக வந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே இணையத்தில் பரவி வரும் அப்புகைப்படம் குறும்படம் ஒன்றிற்காக எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் முத்து தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக ஊடகங்கள் காத்திருக்கின்றன.