Home Featured கலையுலகம் மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி!

மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி!

843
0
SHARE
Ad

sunsara_vccc1மதுரை – ‘அசத்தப்போவது யாரு’ புகழ் மதுரை முத்துவின் மனைவி, இன்று திருப்பத்தூர் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனது குழுவினருடன் மதுரை முத்து, அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரது மனைவி விபத்தில் உயிரிழந்தது, சினிமா வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முத்துவிற்கு அவரது மனைவி இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் தற்போது அமெரிக்காவில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அண்மையில் தான் புதுவீடு கட்டி, மனைவி வையம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார் மதுரை முத்து.

இன்று காலை காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு காரில் சென்றுள்ளார் வையம்மாள். காரை பாண்டி என்பவர் ஓட்டிக் கொண்டு செல்ல, திடீரென காரின் டயர் வெடித்ததால், கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த வையம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பலத்த காயமடைந்த ஓட்டுநர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல்: விகடன்.