Home Featured கலையுலகம் மலேசியாவிற்குள் நுழைய நயன்தாராவிற்கு அனுமதி மறுப்பா?

மலேசியாவிற்குள் நுழைய நயன்தாராவிற்கு அனுமதி மறுப்பா?

773
0
SHARE
Ad

Nayantharaகோலாலம்பூர் – சீயான் விக்ரம் நடிப்பில் ‘இருமுகன்’ படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகின்றது. அப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.

இந்நிலையில், நேற்று அவர் மலேசியா வந்த போது, மலேசிய விமான நிலையத்தில் அவரது கடப்பிதழை சோதனை செய்த குடிநுழைவு அதிகாரிகள், பெயர் குழப்பதால், சற்று நேரம் அவரைத் தடுத்து நிறுத்தியதாக பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களில் படத்துடன் தகவல் வெளிவந்துள்ளது.

தனது நிஜப் பெயரான டயானா மரியம் குரியன் என்பதை சினிமாவிற்காக நயன்தாரா என்று மாற்றிக் கொண்டதோடு, பிறப்பில் கிறிஸ்தவரான அவர், அண்மையில் இந்து மதத்தைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, இந்தப் பெயர் குழப்பம் தான் நயன்தாராவை, மலேசியக் குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதற்குக் காரணம் என்று கூறி, அவரது கடப்பிதழின் புகைப்படத்துடன் தகவல் ஒன்று உலாவி வருகின்றது.

எனினும், நேற்று கோலாலம்பூரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நயன்தாராவைப் பார்த்ததோடு, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர் மலேசியாவில் சில பிரபலங்கள்.

இந்நிலையில்,  அது சினிமா காட்சியாகவும் இருக்கலாம் என்றும் ஒரு தரப்பு கூறி வருகின்றது. இதனால் அந்தத் தகவலின் உண்மைத் தன்மையில் சந்தேகம் எழுந்துள்ளது.

படம்: பேஸ்புக்