Home Featured கலையுலகம் டிஎச்ஆர் ராகாவின் புத்தம் புதிய நாடகம் – சீரியல் பேய் இன்று முதல்!

டிஎச்ஆர் ராகாவின் புத்தம் புதிய நாடகம் – சீரியல் பேய் இன்று முதல்!

802
0
SHARE
Ad

THR Raagaகோலாலம்பூர் – வானொலி வாயிலாக தங்களுடைய இரசிகர்களைக் கவர்ந்து வரும் டிஎச்ஆர் ராகா புத்தம் புதிய நாடகத்தை ஒன்றைத் தயாரித்துள்ளது. சீரியல் பேய் எனும் தலைப்பில் மர்மம், திகில், நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இந்நாடகத்தை ராணி சுந்தரராஜூ இயக்கியுள்ளார்.

இந்நாடகத்தில் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஜெய், யாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

11 அத்தியாயங்களைக் கொண்ட இந்நாடகம் டிஎச்ஆர் ராகாவின் முகநூலில் மட்டுமின்றி வானவில் அலைவரிசையிலும் இரவு 9 மணியளவில் ஒளிபரப்பப்படும்.

#TamilSchoolmychoice

இன்று ஆகஸ்ட் 22-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி, வரும் வெள்ளிக்கிழமை வரை முதல் 5 அத்தியாங்களைக் கண்டுக் களிக்கலாம்.

அடுத்ததாக, வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி, வரும் செப்டம்பர்  3-ஆம் தேதி வரை, அடுத்த 6 அத்தியாங்களைக் காணலாம்.

அதை வேளையில், இந்நாடகத்தின் 11 அத்தியாயங்களையும், பினாங்கில் எதிர்வரும் செப்டம்பர்  3-ஆம் தேதி, நடைபெறவுள்ள டிஎச்ஆர் ராகாவின் திகில் மேடை நிகழ்ச்சியின் போது அறிவிப்பாளர்கள் நடிக்கவுள்ளார்கள்.

இந்நாடகத்தின் முன்னோட்டத்தை டிஎச்ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் அல்லது முகநூலில் காணலாம்.

மேல் விவரங்களுக்கு raaga.thr.fm அகப்பக்கத்தை நாடுங்கள்.