Home Featured உலகம் மதிப்பு தெரியாமல் 10 ஆண்டுகளாகப் பாதுகாத்த பொக்கிஷம் – பிலிப்பைன்ஸ் மீனவருக்கு அடித்த யோகம்!

மதிப்பு தெரியாமல் 10 ஆண்டுகளாகப் பாதுகாத்த பொக்கிஷம் – பிலிப்பைன்ஸ் மீனவருக்கு அடித்த யோகம்!

731
0
SHARE
Ad

Pearlமணிலா – தான் வைத்திருப்பது மில்லியன் கணக்கில் மதிப்புள்ள பொருள் என்பது தெரியாமலேயே, அதனை கடந்த பத்து ஆண்டுகளாக படுக்கைக்கு அடியில் வைத்துப் பாதுகாத்து வந்திருக்கிறார் பிலிப்பைன்சைச் சேர்ந்த மீனவர் ஒருவர்.

அவர் இத்தனை ஆண்டுகாலமாக வைத்திருந்தது உலகிலேயே மிகப் பெரிய கடல் முத்து என்பது அண்மையில் தான் அவருக்குத் தெரியவந்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்ற போது, கண்டெடுத்த அம்முத்தை, இத்தனை காலமாக அதிர்ஷ்டக் கல்லாக வீட்டில் வைத்திருந்திருக்கிறார் அம்மீனவர். அண்மையில் அவர் வீட்டில் தீப்பற்றிய போது தான் அம்முத்து வெளியே எடுக்கப்பட்டு வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

34 கிலோ எடை கொண்ட அந்த முத்து தான் உலகிலேயே மிகப் பெரிய முத்து என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.