மியன்மார் நிலநடுக்கத்தில் பழமைவாய்ந்த புத்த கோபுரங்கள் சேதம்!

    795
    0
    SHARE
    Ad

    myanmmarயாங்கோன் – நேற்று புதன்கிழமை மியான்மரை உலுக்கிய 6.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தில், பாகானில் அமைந்திருந்த நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த புத்திஸ்ட் பாகோடாஸ் (கோபுரங்கள்) சேதமடைந்துள்ளன.

    கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட கோபுரங்கள் சேதமடைந்திருப்பதாக மியன்மார் ஊடகங்கள் கூறுகின்றன.

    இந்த6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் பேங்காக், கிழக்கு இந்திய பகுதிகள் ஆகியவற்றை இந்த அதிர்வுகளை உணர முடிந்துள்ளது.

    #TamilSchoolmychoice

    “சுமார் 10 வினாடிகளுக்கு நாங்கள் கடுமையான நில அதிர்வை உணர்வை உணர்ந்தோம், அடுத்ததாக மற்றொரு வலுவான அதிர்வை வரும் போது நாங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறிவிட்டோம்” என குழந்தைகளுக்கான அறக்கட்டளை வைத்துள்ள வின்செண்ட் பன்சானி என்பவர் தெரிவித்துள்ளார்.