காபூல் – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடுகளும், வெடிகுண்டு சத்தங்களும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அந்தத் தாக்குதல் சம்பவத்தில் இதுவரை ஒருவர் பலியாகியிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்டவர் ஒரு பாதுகாவலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு உள்நாட்டு நேரப்படி 7.50 மணியளவில் இந்தத் தாக்குதல் தொடங்கியது.
வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கிச் சூடுகள் நடத்தியும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் பாதுகாப்புப் படையினர் தாக்குதல்காரர்களைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி இன்னும் பல்கலைக் கழக வளாகத்திற்குள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட பலர் கட்டிடங்களில் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.