Home Featured உலகம் விபத்தில் சிக்கினார் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்!

விபத்தில் சிக்கினார் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன்!

667
0
SHARE
Ad

richard3_0பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் – கோடீஸ்வரரான விர்ஜின் குழுமத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன், தான் விபத்து ஒன்றில் சிக்கி அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.

நிதிதிரட்டும் சாகச நிகழ்ச்சி ஒன்றிற்காக, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில், தனது இரண்டு குழந்தைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தான் ஓட்டிச் சென்ற மிதிவண்டி, இருட்டில் சாலை மேடு ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.

richard2“அப்போது எனக்குத் தெரிந்தது, நான் கைப்பிடியையும் தாண்டி வீசப்படுகின்றேன். எனது வாழ்க்கை என் கண் முன்னே ஒளிருகிறது” என்று 66 வயதான ரிச்சர்டு தனது வலைப்பூவில் எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “நான் உண்மையில் சாகப் போகிறேன் என்று நினைத்தேன்” என்றும் ரிச்சர்டு குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அவரது கன்னம், தோள்பகுதி ஆகியவற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, உடம்பிலும் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பபட்டுள்ளதாகத் தெரிகின்றது.

richardதலைக்கவசம் அணிந்திருந்ததால், தலையில் காயங்கள் இன்றி உயிர்தப்பியுள்ளார். அதோடு, மலைச்சரிவில் இவ்விபத்து ஏற்பட்டதால், அவரது மிதிவண்டி எங்கோ உடைந்து நொறுங்கி பள்ளத்தில் விழுந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.