Home வணிகம்/தொழில் நுட்பம் விமானப் பணிப் பெண்ணாக உருமாறினார் வெர்ஜினியா அதிபர் ரிச்சர்ட் பிரான்சன்

விமானப் பணிப் பெண்ணாக உருமாறினார் வெர்ஜினியா அதிபர் ரிச்சர்ட் பிரான்சன்

671
0
SHARE
Ad

Richard-Branson-Air-Asia-stewardessமெல்பர்ன், மே 12 – போட்டியென்று வந்து விட்டால் எந்த சவாலையும் ஏற்று வென்று காட்டுபவர்கள் வணிகர்கள். அதிலும் கோடீஸ்வர வணிகர்கள் என்றால் கேட்கவே வேண்டாம், வணிகத்தில் வெற்றியடைய எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

#TamilSchoolmychoice

அவர்களில் வித்தியாசமானவர் என்று நிரூபித்தார் பிரிட்டனின் பிரபல மலிவு விலை விமான நிறுவனமான வெர்ஜினியா நிறுவனத்தின் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன்.

ஏர் ஆசியா அதிபர் டோனி பெர்னாண்டசுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கார் பந்தயம் தொடர்பாக ஒரு பந்தயம் கட்டியிருந்தார் ரிச்சர்ட் பிரான்சன். அந்த பந்தயத்தில் தோல்வியடைந்தால் தான் ஏர் ஆசியா பணிப் பெண்ணாக உருமாறி ஒருமுறை விமான சேவையில் பணியாற்றுவேன் என்பதுதான் பிரான்சன் விட்ட சவால்.

பந்தயத்தில் தோல்வி அடைந்ததால் நேற்று மெல்பர்ன் நகரிலிருந்து கோலாலம்பூர் வந்தடைந்த ஏர் ஆசியா விமானத்தில் விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றினார் பிரான்சன்.

விமானப் பணிப் பெண்களுக்குரிய உடையணிந்து, அதற்குரிய முக ஒப்பனைகளும் செய்து கொண்டு உயர்ந்த குதிகால் காலணிகளோடு அசல் விமானப் பணிப் பெண்ணாகவே மாறினார் பிரான்சன்.

மெல்பர்ன் நகரில் ஒரு மதுபானக் கடையில் ரிச்சர்ட் பிரான்சனின் கால்களில் இருந்த முடிகளை ஏர் ஆசியா விமானப் பணிப் பெண்கள் மழித்துவிட்டார்களாம்.

அதன் பின்னர் விமானப் பணிப்பெண் போல உடுத்திக் கொண்டு மெல்பர்ன் நகரிலிருந்து புறப்படும் ஏர் ஆசியா விமானத்தில் பயணம் செய்து கோலாலம்பூர் வந்தடைந்தார் பிரான்சன். அவரோடு, ஏர் ஆசியா அதிபர் டோனி பெர்னாண்டசும் உடன் வந்தார்.

கேளிக்கை முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட 30,000 ஆஸ்திரேலியா டாலர் ஒரு நல்ல காரியத்திற்காக நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.